மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் கே.கே உடல் இன்று மும்பையில் தகனம்!!

மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் கே.கே உடல் இன்று மும்பையில் தகனம்!!
Published on
Updated on
1 min read

பிரபல பின்னணி பாடகர் கே.கே. உடல் இன்று மும்பையில் தகனம் செய்யப்பட உள்ளது.

கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓட்டல் திரும்பிய பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று அவருக்கு மேற்குவங்க மாநில அரசு  சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, குன்னத் குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் இன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறுதி சடங்குகளுக்கு பிறகு உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இதற்கென நேற்றிரவு அவரது உடல் விமானம் மூலம் மும்பை கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com