அடுத்த லேடி சூப்பர் ஸ்டாராக தயாராகும் பிரியா பவானி சங்கர்.. நடிகையின் மாஸ்டர் பிளான் 

அடுத்த லேடி சூப்பர் ஸ்டாராக தயாராகும் பிரியா பவானி சங்கர்.. நடிகையின் மாஸ்டர் பிளான் 

சினிமாவில் தற்போது ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின்களும் மாஸான ஆக்சன் கதைகளை தேர்வு செய்து சோலோ நாயகியாக நடித்து வருகிறார்கள். 

ஏற்கனவே நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து பல நடிகைகள் நடித்து வரும் வேளையில் தற்போது இந்த வரிசையில் நடிகை பிரியா பவானி சங்கரும் இணைந்துள்ளார்.

கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது சர்ஜூன் இயக்கத்தில் பிளட் மணி என்ற படத்தில் நடித்துள்ளார். வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

இதுவரை ஹீரோவுடன் சேர்ந்து டூயட் மட்டுமே பாடி வந்த பிரியா பவானி சங்கர் தற்போது சோலோவாக நடிக்கும் புதிய யுக்தியை கையில் எடுத்து கலக்கியுள்ளார். அதிலும் தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளார். கிட்டத்தட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலவே தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கட்சிதமாக செய்து முடித்துள்ளார்.