
செய்தி வாசிப்பாளராக தொடங்கிய தற்போது முன்னணி கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் வலம் வருகிறார். தற்போது 10 படங்கள் கைவசம் வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர். அதாவது குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், யானை, இந்தியன் 2 மற்றும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா தற்போது முன்னணியில் டஃப் கொடுக்கும் அளவிற்கு பிரியா பவானி சங்கர் வளர்ச்சியை பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர், அவ்வபோது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருவார். மேலும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வார். தற்போது பிரியா பவானி சங்கர் ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் 360 கிலோ எடையை பிரியா பவானி சங்கர் தூக்கும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.