”கே.ஜி.எப் 2” வின் பிரபல வசனத்தை மாற்றி கல்யாண பத்திரிக்கையில் பட்டைய கிளப்பும் பஞ்ச்! வெறித்தனமான ரசிகனா இருப்பார் போலேயே..!

”கே.ஜி.எப் 2”  வின் பிரபல வசனத்தை மாற்றி கல்யாண பத்திரிக்கையில் பட்டைய கிளப்பும் பஞ்ச்! வெறித்தனமான ரசிகனா இருப்பார் போலேயே..!
Published on
Updated on
1 min read

கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற, மிகவும் பிரபலமான வசனத்தை சற்று மாற்றி, திருமணப் பத்திரிக்கையில் அச்சிட்டுள்ள மணமகனின் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேஜிஎப் சாப்டர் ஒன் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம், உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.  

இந்த நிலையில், கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர், கேஜிஎப் 2 திரைப்படத்தில் வைலன்ஸ் பற்றி நடிகர் யாஷ் பேசிய புகழ்பெற்ற வசனமான "Violence...Violence...Violence...I dont like it... I avoid...But Violence like me... I cant avoid" என்பதை, சற்றே மாற்றி தன்னுடைய திருமண அழைப்பிதழில் அச்சடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com