இவரை தான் காதலிக்கிறேன்... அடுத்த ஆண்டு ரகுல் பிரீத் சிங் திருமணம்..!! 

இவரை தான் காதலிக்கிறேன்... அடுத்த ஆண்டு ரகுல் பிரீத் சிங் திருமணம்..!! 

தென்னிந்திய திரையுலகின் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து வருகிறார். ரகுல் பிரீத் சிங் தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடிக்கிறார். 

தனது பிறந்த நாளான கடந்த அக்டோபர் 10-ந்தேதி ஹிந்தி பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை தான் காதலிப்பதாக அறிவித்தார். ரகுலுக்கு ஜாக்கியும் காதலை உறுதிப்படுத்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Rakul is going marry bollywood actor..?

இதையடுத்து இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமணத்திற்கு முன்பு தனது கைவசமுள்ள அரை டஜன் படங்களிலும் நடித்து முடிக்க எண்ணி உள்ளார் ரகுல். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்