
நடிகர் ரஜினிகாந்த், தனது பேரனுடன் அமர்ந்து, அண்ணாத்த படத்தை பார்த்து ரசித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஹூட்டே என்ற சமூக வலைத் தளத்தை தொடங்கியுள்ள ரஜினிகாந்த், அதில் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது பேரனுடன் அமர்ந்து அண்ணாத்த படத்தை பார்த்ததாகக் கூறியுள்ளார்; படம் முடிந்ததும், தனது பேரன் தன்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு 3 முதல் 4 நிமிடங்கள் அப்படியே இருந்ததாகவும், படம் சூப்பராக இருந்தது என்று கூறியதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.