"மது பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால், சமுதாயத்திற்கு நிறைய சேவை செய்திருப்பேன்" ரஜினிகாந்த் வருத்தம்!

"மது பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால், சமுதாயத்திற்கு நிறைய சேவை செய்திருப்பேன்" ரஜினிகாந்த் வருத்தம்!

"என் வாழ்க்கையில் மது இல்லாமல் இருந்திருந்தால் நான் சமுதாயத்திற்கு நிறைய சேவை செய்திருப்பேன்" என நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் இசை வெளியீட்ட விழாவில் தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்  ஜெயிலர் படம் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். 

ஜெயிலர் படத்தின் கதையை தன்னிடம் சொல்லும்போது உடனடியாக பிடித்தது எனவே ஓகே செய்தேன் படம் அற்புதமாக வந்திருக்கிறது என கூறிய ரஜினிகாந்த், "இந்த படம் பாட்சா மாதிரி இருக்குமான்னு தெரியல. ஆனா அதுக்கும் மேல இருக்கும். நீங்க தான் பார்த்துட்டு சொல்லனும்" என்று கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 

"என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான். அதனால் தான் ஹூக்கும் பாடலில் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை மட்டுமே நீக்க சொன்னேன். பாடல் அற்புதமாக இருக்கிறது" என மகிழ்ச்சி பொங்க கூறினார். "காவாலா பாடலில் தமன்னா அட்டகாசமாக ஆடியிருப்பார். தனக்கு வேலை கம்மி தான் ஒரேயொரு ஸ்டெப்போடு முடித்து விட்டேன்" என சிரித்து கொண்டே பேசியது ரசிகர்களை ஈர்த்தது. 

"என் வாழ்க்கையில் மது இல்லாமல் இருந்திருந்தால் நான் சமுதாயத்திற்கு நிறைய சேவை செய்திருப்பேன். மது தான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு" என பகிரங்கமாக தெரிவித்து ரசிகர்களை கலங்க செய்தார்.  

தொடர்ந்து பேசிய அவர் அதனால் “யாரும் தயவு செய்து குடிக்காதீங்க. நீங்கள் ஒருவர் குடித்தால் உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், என எல்லோரும் சிரமப்படுவார்கள்” என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்து அவர்களை நெகிழ்ச்சியில் மூழ்கடித்தார். 

பேசிகொண்டிருக்கும் போதே ரஜினிகாந்த் ”சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லைதான்..” என கூறியதும், அந்த இடமே கர கோஷத்தால் அதிர்ந்தது.  அண்ணாத்த படத்திற்கு பிறகு ஒரு படம் ரிலீஸாக நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்ட ரஜினிகாந்த் . சரியான கதை கிடைக்காததால் இவ்வளவு நாட்கள் ஆகி விட்டதாக தெரிவித்தார். மேலும், இயக்குநரும் கதையும் படத்திற்கு மிகவும் முக்கியம் என்றார். 

இதையும் படிக்க:சர்வதேச திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே'!