ரஜினிகாந்த்க்கு ஆளுநர் பதவி கிடைக்குமா ? சகோதரர் சத்யநாராயண ராவ் பதில்!

ரஜினிகாந்த்க்கு ஆளுநர் பதவி கிடைக்குமா ?  சகோதரர் சத்யநாராயண ராவ் பதில்!
Published on
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார், அவருக்கு ஆளுநர் பதவி என்பது ஆண்டவன் முடிவு தான் என நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கூறியிருக்கிறார். 

மதுரை, தெப்பக்குளம் பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகருடைய இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கலந்து கொண்டார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சத்யநாராயணன், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் எனவும், அவருக்கு ஆளுநர் பதவி கிடைப்பது ஆண்டவர் முடிவு தான் எனவும் தெரிவித்தார். மேலும், ரஜினி - ஓபிஎஸ் சந்திப்பு குறித்த கேள்விக்கு, அதில் எதுவும் அரசியல் இல்லை என பதில் அளித்தார்.

முன்னதாக ஜெயிலர் திரைப்படத்தின் 25 ஆவது நாளை கொண்டாடும் விதமாகவும், ரஜினி நல்ல ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ வேண்டியும்  மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில் ரஜினி ரசிகர்களுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com