வருகிறார் ‘சாமானியன்’! ராமராஜனின் ரீ-எண்ட்ரி!!!

ராமராஜன் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-எண்ட்ரி கொடுக்கும் நிலையில், படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

வருகிறார் ‘சாமானியன்’! ராமராஜனின் ரீ-எண்ட்ரி!!!

61 வயதான நடிகர் ராமராஜன், தமிழ் திரையுலகை ஒரு காலத்தில் ஆட்சி செய்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர், அக்காலத்திலேயே பல பெரும் நடிகர்களைப் பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபீசை தன் வயப்படுத்தி வைத்திருந்தார். அவரது படங்கள் என்றாலே, தியேட்டர்களில் அலை மோதும்.

அவரது படங்கள் குடும்ப பாங்கான படங்கள் என்பதை தாண்டி, அவரது நடிப்புக்காகவும், எதார்த்தமான காட்சிகளுக்காகவும், அவரது படத்தில் வரும் பாடல்களுக்காகவும் தனித்தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவ்வகையில் சமீபமாக பல படங்களின் வாய்ப்புகள் தவிர்த்து, பின், பல ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமலேயே இருந்தார்.

தற்போது மீண்டும் கோலிவுட்டிற்கு ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார் மக்கள் நாயகன் ராமராஜன். ‘சாமானியன்’ எனத் தலைப்பிடப்பட்ட படத்தில், எக்ஸ்ட்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், உருவாக இருக்கும் படத்தின் மூலம், மீண்டும் திரையுலகை ஆட்டி வைக்க வருகிறார். ராம ராஜனுடன் ராதாரவி , எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

இந்த படத்தின் தலைப்பு வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும், ‘வெல்கம் பேக் ராமராஜன்’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில், ஒரு பான் இந்தியா படமாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்ட இந்த போஸ்டர்கள் மூலம், படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்றே சொல்லாம்.