திருமணம் குறித்து கேள்வி கேட்ட ரசிகர்? மனம் திறந்து ஒப்பனாக பதிலளித்த ரம்யா பாண்டியன்!!

திருமணம் குறித்து கேள்வி கேட்ட ரசிகர்?  மனம் திறந்து ஒப்பனாக பதிலளித்த ரம்யா பாண்டியன்!!
Published on
Updated on
2 min read

ஜோக்கர் படத்தில் நடித்திருந்த ரம்யா பாண்டியனை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடவில்லை. என்ன செய்வது என யோசித்த ரம்யா பாண்டியன் நடிகைகளின் யுக்தியை கையில் எடுத்துக்கொண்டார்.


 கேஷுவலாக தனது வீட்டின் மாடியிலிருந்து போட்டோ சூட் ஒன்றை நடத்தினார். அதில் இடுப்பு மடிப்பு தெரிவது போல் எடுத்த புகைப்படம் இணையத்தளத்தில் படு வைரலானது. அதன்மூலம் சமூகவலைத்தளங்களில் மிக பெரிய அளவில் டிரெண்ட் ஆன அவருக்கு குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்பட பல வாய்ப்புகள் கிடைத்ததோடு அடுத்தடுத்த படங்களிலும் கமிட் ஆகி நடிக்க தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் இவர், ரசிகர்களுடன் உரையாடி வந்தார். அப்போது, ரசிகர் ஒருவர் ரம்யா பாண்டியனிடம் திருமணம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், ‘இன்று வரை நான் இன்னும் எனக்கானவரை கண்டு பிடிக்கவில்லை என்றும் அப்படியே கண்டுபிடித்தாலும் அவருக்கு என்னை பிடிக்க வேண்டும் என்றும் அதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா’ என்றும் பதிலளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மற்றொரு ரசிகர், ‘எனது மகனுக்கு உங்களைப் போன்ற பெண்ணை தான் தேடிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் என்ன படித்து உள்ளீர்கள்’ என்று கேட்டதற்கு ’இந்த விஷயம் உங்கள் மகனுக்கு தெரியுமா’ என்று காமெடியாக பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com