ஒரே ஒரு போட்டோ போட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஏங்க வைத்த ராஷ்மிகா...!!

ஒரே ஒரு போட்டோ போட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஏங்க வைத்த ராஷ்மிகா...!!

கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றவர். தமிழில் எப்பொழுது அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

அந்த எதிர்ப்பார்ப்பும் விரைவிலேயே நிறைவேறியது ஆம்,ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். அதனைதொடர்ந்து மீண்டும் தமிழில் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறனர் என்றே சொல்லலாம்.

இப்போது இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகி்றார். இந்த படத்தில் வள்ளி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற ராஷ்மிகாவின் லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இவர்  ஹிந்தியிலும் மிஷன் மஜ்னு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்  . அந்த வகையில் தற்போது தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாவது மட்டுமல்லாமல், இதனை பார்க்கும் ரசிகர்கள் தான் அந்த நாயாக இருந்திருக்க கூடாதா என ஏங்கி வருகின்றனறாம்.