" கோவில் கட்டுவதை விட..." நடிகர் சூரியின் சர்ச்சை பேச்சை தொடர்ந்து வைரலாகும் வீடியோ...!

நடிகர் சூரியின் பேச்சு சர்ச்சையான நிலையில், சொந்த ஊரில் அவர் ஒயிலாட்டம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்..!
" கோவில் கட்டுவதை விட..."  நடிகர் சூரியின் சர்ச்சை பேச்சை தொடர்ந்து வைரலாகும் வீடியோ...!
Published on
Updated on
1 min read

சில தினங்களுக்கு முன்பு நடிகர் கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், கோவில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும் என நடிகர் சூரி பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், அவருடைய சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் விழாவில் ஒயிலாட்டம் ஆடும் வீடியோவினை சூரியின் நண்பர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.  

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூரி, கோவில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும் என பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்புகள் வந்தது.  

இந்நிலையில் சூரியின் பிறந்த ஊரான மதுரை மாவட்டம், ராசாக்கூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் திரைப்பட நடிகர் சூரி பொதுமக்களுடன் இணைந்து ஊர் பெரியவர்கள்,  இளைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடும் வீடியோவை அவரது சொந்த ஊர் மக்கள், அவரது நண்பர்கள் மற்றும் அவரது  ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பதிவிட்டு வருகின்றனர். 

அதில் அந்த வீடியோவில், நடிகர் சூரி சுவாமி பக்திக்கும் கோவிலுக்கும் ஆன்மீகத்திற்கும் எதிரானவர் அல்ல. அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் அவருடைய குடும்பம் ஒரு சாமியாடி குடும்பம் என்பதை கருத்தாக பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com