வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! - போஸ்டர் கொண்டாட்டம்

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், கோவை தெற்கு மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் விஜர் நடிப்பில் லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட துவங்கி உள்ளனர். அதே சமயம் விஜய்யின் பல்வேறு நலத்திட்டங்கள் அரசியல் ஈடுபாட்டிற்கு உதாரணமாய் விளங்கி வருகிறது. 

இதுபோன்ற விஜய்யின் அரசியல் முன்னெடுப்புகள் மற்றும் திரைப்பயணங்களை அவரது ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர் என அனைவரும் போஸ்டர்கள் ஒட்டி உணர்வுகளை வெளிபடுத்தி வருகின்றனர். 

இதையும் படிப்பை : சிவகாசி பட்டாசு வெடி விபத்து - பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!

இந்நிலையில் நாளை லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தலைமை செயலக படத்துடன், கோவை தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.  அந்த போஸ்டரில் ”லியோ வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி!” என்ற வாசகத்துடன் தலைமை செயலக படத்துடன் விஜய் ரசிகர் மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டி உணர்வுகளை வெளிபடுத்தி வருகின்றனர்.  

அதே போன்று புல்லுக்காடு பகுதி விஜய் ரசிகர்கள் சார்பில் "தமிழும் தளபதியும் தங்கள் அடையாளம்... ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாகாது..." என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.