பொழுதுபோக்கு
நயன்தாராவை தொடர்ந்து ரெஜினா.. வைரல் புகைப்படம்
போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டை புகைப்படங்களை ரெஜினா வெளியிட்டுள்ளார்.
கண்ட நாள் முதல் படம் மூலம் அறிமுகமான ரெஜினா கசான்ட்ரா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது கார்த்திக் ராஜூ இயக்கத்தில் 'சூர்ப்பனகை' படத்தில் நடித்து வருகிறார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டை புகைப்படங்களை ரெஜினா வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நடிகை நயன்தாராவின் படம் போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை பக்கத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.