வெளியானது "கலகத்தலைவன்" ; ரசிகர்கள்,பிரபலங்கள் மத்தியில் குவியும் பாராட்டு மழை!!!

வெளியானது "கலகத்தலைவன்" ; ரசிகர்கள்,பிரபலங்கள் மத்தியில் குவியும் பாராட்டு மழை!!!

 நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாறுபட்ட வேடத்தில்  நடித்துள்ள  "கலகக் தலைவன்"  என்ற திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் உள்ள  திரைஅரங்குகளில் இன்று காலை வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

வெளியானது கலகத்தலைவன் :

 சென்னை : அசோக் நகர் காசி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் திரைப்படம் இன்று காலை வெளியான நிலையில் சென்னை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செய்து, இப்படத்தினை  மேள தாளம், மயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் உதயநிதியின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 8.30 மணியலவில் தொடங்கிய நிலையில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் தியேட்டருக்கு வந்து கண்டு களித்தனர்.

மேலும் தெரிந்துகொள்ள :“லவ் டுடே” இயக்குநரை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்...

படக்குழுவை பாராட்டிய முதல்வர்  :

சென்னை : ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன்.இப்படத்தில் நிதி அகர்வால், பிக் பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.கலகத் தலைவன் படத்தின் சிறப்பு காட்சியை முன் தினமே பார்த்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்,உதயநிதி மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனியை வெகுவாக பாராட்டினார். அவர் மட்டுமில்லாமல் அவரது குடும்பமும் திரைப்படத்தை பார்த்து ரசித்தனர்.படக்குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது எனவும், உதயநிதி கதாபாத்திரம் சிறப்பாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளார் .

உதயநிதியின் அசத்தலான படம் :

கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான ஆர்டிகிள் 15  என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கி உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம்  ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை  பெற்றது.இந்த படத்தின் வரிசையில் இப்பொது வெளியாகியுள்ள கலகத்தலைவன் திரைப்படமும் தியேட்டர்களில் நல்ல வசூல் செய்து வருகிறது.இதைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் என்ற புதிய படத்தில் உதய நிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கலகத்தலைவனை உருவாக்கிய இயக்குநர் :

மீகாமன், தடம்  போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனியுடன் உதயநிதி ஸ்டாலின்  
 கைகோத்து கலகத் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இசையமைத்துள்ளனர்.அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இப்படத்தின் புக்கிங் இரண்டு நாட்களுக்கு தொடங்கியது.இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, உதயநிதி எப்பொழுதும் பணிவாக இருக்க கூடியவர் ,அதனால் தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார்.10 வருடத்தில் பல படங்களில் வித்தியாசமான பல கதாபத்திரங்களை ஏற்று நடித்து சினி உலகில் அவருக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.இப்போது வெளியாக இருக்கும் இத்திரைப்படமும் உங்களை ஏமாற்றாது தாராளமாக நம்பி படத்தை பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள :பிரபல திரைப்பட நடிகரிடம் செல்போன் வழிப்பறிப்பு ; வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை...


குவியும் பாராட்டு மழை :

இன்று வெளியான கலகத்தலைவன் திரைப்படத்தை பார்த்து விட்டு ரசிர்கள் மற்றும் பிரபல திரைப்பட நடிகர்கள் ,மற்றும் நடிகைகள் படக்குழுவிற்கு தங்களது பாராட்டை தெரிவிக்கின்றனர்.இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ஆரவ் வில்லன் ரோலில் சிறப்பாக நடித்து மாஸ் காட்டியுள்ளார்.திண்டுக்கல் ஐ லியோன் இப்படத்தை பார்த்து  வில்லன் ஆரவ் மற்றும் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார்.நடிகர் கூல் சுரேஷ் தியேட்டரில் வந்து படத்தை பார்த்து சுட சுட செய்தியர்களுக்கு பேட்டி அளித்தார்.ரஜினி ,கமல்,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,மற்றும் பல திரைப்பட பிரபலங்கள் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிற்கு பாராட்டு மழையை குவித்து வருகின்றனர்.

---ஸ்வாதிஸ்ரீ