இன்று கோடியில் சம்பளம் வாங்கும் விஜய்யின்...முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆச்சரியப்படுவீங்க !

கோடியில் புரளும் நடிகர் விஜய்யின் முதல் சம்பளம் எவ்வளவு என்பதை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கோடியில் சம்பளம் வாங்கும் விஜய்யின்...முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆச்சரியப்படுவீங்க !
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். தற்போது அவர் கிட்டதட்ட 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி கோடியில் புரளும் விஜய்யின் முதல் சம்பளம் என்பது அனைவருக்கும் அறியாத ஒன்று தான். 

இந்நிலையில் நடிகர் விஜய்யின் முதல் சம்பளம் குறித்து சமீபத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

’நாளைய தீர்ப்பு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தனது திரைப்பயணத்தை நடிகர் விஜய் தொடர்ந்திருந்தாலும், அதற்கு முன்பே அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சில படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்த வகையில் விஜய் முதல்முதலாக குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 500 ரூபாய் என சமீபத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்றே சொல்லலாம்.

வெறும் 500 ரூபாய் சம்பளத்தில் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய், இன்று சுமார் 100 கோடி சம்பளத்தை நெருங்கி இருப்பது அவரது உணமையான உழைப்பையும், நடிப்பு மீது அவருக்கு இருக்கும் அளவில்லா ஈடுபாட்டையும் வெளிபடுத்துகிறது என்று ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மேலும் மேலும் அவரது வளர்ச்சி திரைப்பயணத்தில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் எனவும் கூறீ வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com