விஜய்யின் 68 வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனா...? இணையத்தில் வெளியாகும் தகவல்!

விஜய்யின் 68 வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனா...? இணையத்தில் வெளியாகும் தகவல்!
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் 68 வது படத்தின் வில்லன் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், தனது 67 வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யும் - த்ரிஷாவும் இணைந்து நடிக்கவுள்ள ‘லியோ’  படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. 

நடிகர் விஜய்யின் 67 வது படத்தின் சூட்டிங் இன்னும் நிறைவடையாத நிலையில், விஜய்யின் 68 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி, விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் எனவும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் எனவும் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இப்படத்தின் மூலம் விஜய்யுடன் வெங்கட்பிரபு முதன்முறையாகவும், அதேசமயம் யுவன்சங்கர்ராஜா இரண்டாவது முறையாகவும் கூட்டணி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய்யின் 68 வது படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com