கல்யாண நாளில் சமந்தா வெளியிட்ட Sad போஸ்ட்

கல்யாண நாளில் சமந்தா வெளியிட்ட Sad போஸ்ட்
Published on
Updated on
1 min read

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து முழுக்கு போடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார்.

சமந்தா திருமணம் செய்து நேற்றோடு நான்காண்டுகளாகிறது. ஆனால் இந்த திருமணநாளில் அவர் கணவருடன் இல்லை. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

அதில் ஒரு போட்டோவை பகிர்ந்து, ”பழைய காதலின் பாடல்கள் - மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம், தொலைந்து மீட்டெடுக்கப்பட்ட படங்களின் பாடல்கள். பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதுவொரு பேஷன் ஷோ-வுக்காக போடப்பட்ட பதிவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இதே நாளில், ”நீ எனக்கானவன் நான் உனக்கானவள், எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக திறப்போம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்” என நாகசைதன்யாவுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com