
சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா இருவரும் மும்பையில் ஒரு பங்களாவை வாங்கினர்.
பாலிவுட் நடிகைகளான ராஷ்மிகா மந்தானா, பூஜா ஹெக்டே மும்பையில் வீடு உள்ளதாக கூறப்பட்டது.
தற்போது நடிகை சமந்தாவும் மும்பையில் புதிய பிளாட் ஒன்றை வாங்க இருப்பதாகவும் அதற்காக நல்ல இடத்தைத் தேடி வருவதாகவும் தகவல் உலா வந்துகொண்டிருக்கிறது.
நடிகை சமந்தா சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் சீரிஸின் இரண்டாம் பாகத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். அறிமுகமான முதல் முயற்சியிலேயே ஹிந்தி ரசிகர்கள் மனதை வென்றுள்ளார். எனவே இனிவரும் காலங்களில் அவர் அதிக இந்திப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அவரது கணவர் நாக சைதன்யாவும் அமீர்கான் நடிப்பில் உருவாகிவரும் லால் சிங் சதா என்ற இந்தி படத்தில் நடிக்க உள்ளார். எனவே கணவன்-மனைவி இருவரும் இந்தியில் களமிறங்கியுள்ளதால் மும்பையில் ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து புதிய வீடு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.