மீண்டும் புதிய வெப் தொடரில் சண்டை காட்சிகளுடன் எண்ட்ரீ கொடுக்கும் நடிகை சமந்தா! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா மீண்டும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி படபிடிப்பில் கலந்து உள்ளார்.
மீண்டும் புதிய வெப் தொடரில் சண்டை காட்சிகளுடன் எண்ட்ரீ கொடுக்கும் நடிகை சமந்தா! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Published on
Updated on
2 min read

தமிழில்  ‘பாணாக்காத்தாடி “ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சமந்தா, அடுத்ததடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
அதோடு மட்டுமில்லாமல்,வெப்சீரிஸிலும் கவனம் செலுத்த தொடங்கிய நடிகை சமந்தா ”தி ஃபேமிலி மேன் 2” வெப்சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

அதில் நடிகை சமந்தா போராளியாக நடித்து உலக அளவில் புகழ் பெற்றார். பல விருதுகளையும் பெற்றார். அதே சமயம் இவருடைய கதாபாத்திரத்துக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இந்த தொடரில் ஈழ தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாக எதிர்ப்புகள் எழும்பியதால், அதற்கு விளக்கம் அளித்த சமந்தா, யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அதில் நடிக்கவில்லை. எனது நடிப்பு யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று வருத்தம் தெரிவித்தார்.

இருப்பினும், ”தி ஃபேமிலி மேன் 2” வெப் சீரிஸீக்கு பிறகு சமந்தாவுக்கு இந்தி படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்துள்ளன. இந்நிலையில் சமந்தா தற்போது இன்னொரு இந்தி வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரை இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டீ.கே ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள். அமெரிக்காவில் பிரபலமான சிட்டாடல் என்ற வெப் தொடரின் கதையை அடிப்படையாக கொண்டு இந்த தொடரை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெப் தொடரில் பிரபல இந்தி நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான படபிடிப்பு மும்பையில் தொடங்கிய நிலையில், அவர்களுடன்  படப்பிடிப்பில் சமந்தாவும் இணைந்துள்ளாராம். மேலும் இந்த தொடரில் சண்டை பயிற்சிகள் எடுத்துக்கொண்டு சமந்தா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com