டோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு தாவும் சமந்தா..!!

டோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு தாவும் சமந்தா..!!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

சமந்தா - நாகசைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய போவதாக சமீபத்தில் இருவரும் அறிவித்தனர்.

இந்நிலையில், தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் சமந்தா.
இதையடுத்து வெப்சீரிஸ்களில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக, தி பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் மூலம் ஹந்தியில் அறிமுகமான சமந்தா, தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார்.