மாமனார் ஆபீசுக்கு அவசர அவசரமாக போன சமந்தா... என்ன மேட்டரா இருக்கும் ?

மாமனார் ஆபீசுக்கு அவசர அவசரமாக போன சமந்தா... என்ன மேட்டரா இருக்கும் ?

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாக்கு இருவரும் தங்களது திருமண வாழ்வை முறித்து கொண்ட  விஷயம் அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரின் பிரிவு அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் கூறலாம். அதேசமயம் இருதரப்பிலும் இந்த பிரிவிற்கான காரணம் எதுவும் முழுமையாக சொல்லப்படவில்லை. 

ஆனால் இந்த விவகாரத்தை தொடர்பாக பல்வேறு செய்திகள் உலா வந்தன. இதிலிருந்து விடுபடுவதற்காக அவர் தொடர்ந்து படங்களில்  ஆன்மீகத்திலும் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இதன்மூலம் அவரது மனம் தற்போது அமைதிக்குள்ளாகியுள்ளது.இந்நிலையில் இந்நிலையில், தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவுக்கு நடிகை சமந்தா திடீரென சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் சமந்தா ஏன் அங்கு சென்றார் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வந்தனர். அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள ’சாகுந்தலம்’ படத்தின் டப்பிங் பணிகள் அங்கு நடந்து வரும் நிலையில் அதற்காக சமந்தா அங்கு சென்றதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.