
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது, விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது.
இதனை தொடர்ந்து சமந்தா "சகுந்தலம்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என்ற மொழிகளில் தயாராகும் இப் படத்தை குணசேகர் இயக்குகிறார்.
இந்நிலையில், "சகுந்தலம்" படத்தின் பர்ஸ்ட்லுக் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதில் சமந்தா மயில்களுக்கும், மான்களுக்கும் நடுவில் வனம் ஒன்றில் தேவதை போல் அமர்ந்திருக்கும் போஸ்டர் இருக்கிறது.. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால், வைரலாகி வருகிறது.
Presenting ..
Nature’s beloved..
the Ethereal and Demure.. “Shakuntala” from #Shaakuntalam