பிரபல நடிகையிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்கள்....!

சாலையில் நடந்து சென்றபோது தனது செல்போனை, பறிகொடுத்துவிட்டதாக பாலிவுட்டில் பிரபல நடிகையான நிகிதா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகையிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்கள்....!

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, தனக்கே தெரியாமல் தன்பின்னேயே பைக்கில் வந்த இருவரில் ஒருவர் தன் தலையில் தட்ட, மற்றொருவர் கையில் இருந்த செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றுவிட்டதாக பிரபல பாலிவுட் நடிகை நிகிதா தத்தா தெரிவித்துள்ளார்.

செல்போனை பறித்து சென்றதும் அதிர்ச்சியடைந்த தான், திருடர்களை நோக்கி கூச்சலிட்டப்படியே ஓடி சென்றதை பார்த்த வேறோறு பைக்கில் வந்த இருவர் அவர்களை துரத்தி சென்றனர். இருப்பினும் திருடர்கள் இருவரும் தப்பி சென்றுவிட்டதாக குறிப்பிட்ட அவர்,

இந்த சம்பவத்தில் இருந்து நான் இன்னமும் மீளவில்லை என்றும் பொது இடங்களுக்கு மக்கள் செல்லும் போது மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என அவர் தனது   இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.