முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்...!!!

இயக்குனர் ஷங்கர், தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்...!!!
Published on
Updated on
1 min read

தமிழ் திரையுலகில் எந்திரன்,இந்தியன்,அந்நியன் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஷங்கர். அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார்.

இதில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்நிலையில்,இயக்குனர் ஷங்கர் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். ’அவருடைய ஆசிர்வாதம் மணமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும், அந்த அருமையான நிகழ்வை என்றும் தங்களால் மறக்க முடியாது என்றும்’ ஷங்கர் கூறியுள்ளார்.

மேலும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஷங்கர் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com