"20 ஆண்டுகளுக்கு சித்தா கதாபாத்திரம் பேசும்" சித்தார்த் உறுதி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு சித்தா கதாபாத்திரம் பேசும்,பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் திரையரங்கம் வந்து சித்தா திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று நடிகர் சித்தார்த் பேசியுள்ளார். 

S.U.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடித்துள்ள சித்தா திரைப்படம் வரும் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் பிரத்யேக காட்சி சென்னை சத்யம் சினிமாவில் திரையிடப்பட்டது. இதில் திரைபிரபலங்கள்  பலர் கலந்து கொண்டு சித்தா திரைப்படத்தை கண்டு களித்தனர்.

அப்போது பேசிய சித்தா திரைப்படத்தின் இயக்குநர் அருண்குமார், இதுபோன்ற நல்ல திரைப்படங்களை மக்களிடம் கொண்டு செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். இந்தப் படத்தில் உழைத்த அத்தனை நபர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இந்த திரைப்படத்தை பெற்றோர்கள் குழந்தைகளுடன் வந்து திரையரங்கில் பார்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் சித்தா திரைப்படத்தின் கதாநாயகன் சித்தார்த் பேசுகையில், ஒரு தயாரிப்பாளராக ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்த திருப்தியை உணர்கிறேன் என கூறினார். இயக்குனர் அருண் மிகச் சிறந்த ஒரு படைப்பாளி. படம் பார்த்த அனைவரும் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என பாராட்டியுள்ளனர் என தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை குடும்பமாக வந்து திரையரங்கில் பார்க்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை சித்தா திரைப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என கூறினார். சித்தா ஒரு அருமையான திரைப்படம். நடிகர் கமலஹாசன் திரைப்படத்தை பார்த்து மிகவும் பாராட்டினார். குறிப்பாக புது முகங்களை நன்றாக இயக்கி உள்ளதாக இயக்குனரை பாராட்டினார் என அவர் கூறினார். 

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள இரண்டு குழந்தைகளின் நடிப்பு தன்னையை ஆச்சரியப்படுத்தி உள்ளது என தெரிவித்தார். இதற்கு முன்பு வரை பாய்ஸ் திரைப்படத்தின் முன்னா கதாபாத்திரத்தை தான் அனைவரும் ரசிப்பார்கள் அடுத்த இரவு 20 ஆண்டுகளுக்கு சித்தா திரைப்படத்தின் கதாபாத்திரத்தை மக்கள் நினைவு வைத்திருப்பார்கள் என கூறினார்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் தைரியமாக வந்து இந்த திரைப்படத்தை திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக தெரிவித்தார்

இதையும் படிக்க: உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!