விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்துடன் மோதும் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’?

விஜய் நடித்த பீஸ்ட், சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் நேரடியாக மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்துடன் மோதும் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’?

விஜய் நடித்த பீஸ்ட், சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் நேரடியாக மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில், சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படம், பீஸ்ட் திரைப்படத்துடன் மோத உள்ளதாக கூறப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏப்ரலில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், விஜய் - சிம்புவின் படங்கள் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.