கொரோனா குமார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிம்பு?

கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா குமார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிம்பு?

கடந்த 2013 ஆம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

தற்போது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் தொடர்ச்சியாக கொரோனா குமார் என்ற பெயரில் புதிய படத்தை இயக்க இயக்குனர் கோகுல் திட்டமிட்டிருந்தார். இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.