பாடகி சின்மயியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்...!

பாடகி சின்மயியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்...!

பிரபல பாடகியான சின்மயி அனைவர்க்கும் நன்கு பரிட்சயமான ஒரு முகம், இவர் பல நடிகைகளுக்கு பிண்ணனி குரல் கொடுத்து இருக்கிறார், அதிலும் குறிப்பாக நடிகை சமந்தாவிற்கு குரல் கொடுப்பதில் இவர் அதிக பிரபலமானவர். இவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை ஹேஷ் metoo என்பதன் மூலம் பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரபல பின்னணிப்பாடகி சின்மயி முன்வைத்து வந்தார்.

சமீபத்தில் இவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், இணையத்தில் அநாகரீகமான விமர்சனங்களுக்கு தொடர்ந்து உள்ளானார். இந்நிலையில் கொச்சையான புகைப்படங்களை அனுப்பியவர்கள் குறித்து தொடர்ந்து புகாரளித்து வந்ததால், தன் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார்.