
மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சினேகா - பிரசன்னா இருவரும் ரோமாண்டிக் போட்டோஷூட் நடத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தமிழ் திரையுலகில் சிறந்த ஜோடியாக கருதப்படும் சினேகா - பிரசன்னா தம்பதிக்கு ஆத்யந்தா என்ற மகளும், தான் விஹான் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் சினேகா - பிரசன்னாவின் மகள் ஆத்யந்தாவின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த பிறந்த நாள் விழாவில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் ரொமான்ஸ் போட்டோஷூட் ஒன்றை எடுத்துக்கொண்டனர்.
இந்த போட்டோஷூட்டின் வீடியோவை சினேகா தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ’வாழ்ந்தால் இப்படி வாழனும்’ என ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றனர்.