பத்திரிக்கையாளர்களை பார்த்து சிரித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் மகன்.!!

நடிகை ஷில்பா ஷெட்டியின் மகன் வியான், பத்திரிக்கையாளர்களை பார்த்து புன்னகைத்தபடி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்திரிக்கையாளர்களை பார்த்து சிரித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் மகன்.!!
Published on
Updated on
1 min read

நடிகை ஷில்பா ஷெட்டியின் மகன் வியான், பத்திரிக்கையாளர்களை பார்த்து புன்னகைத்தபடி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய கணவரின் ஜாமீனுக்கு பின், அண்மைக்காலமாக நடிகை ஷில்பா ஷெட்டி பொதுவாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அவர் முசோரியிலிருந்து குழந்தைகளுடன் மும்பை விமான நிலையம் திரும்பியிருந்தார். அப்போது அவரிஅம் பத்திரிக்கையாளர்கள் சிலர், முககவசத்தை கழற்றி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வலியுறுத்தினர்.

அதற்கு இணங்கி போஸ் கொடுத்த அவர், மகன் வியானின் முககவசத்தை கழற்ற கூறியதும் மறுப்பு தெரிவித்தார். ஆனால் சிறுவன் வியான் தனது முகக்கவசத்தை கழற்றியபடி பத்திரிக்கையாளர்களை நோக்கி புன்னகைத்தபடி சென்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com