நரைத்த தாடி தலைமுடியுடன் நிற்கும் கார்த்தியின் கலக்கல் போட்டோ!!காத்திருக்கும் மாஸான ட்ரீட்...
கார்த்தியின் சர்தார் ட்ரீட்...
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் கார்த்திக். இவர் நடிப்பில் வெளியான பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
இந்நிலையில், கார்த்தி நடிப்பில் சென்ற வருடம் வெளியான சுல்தான் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் போட்ட காசை எடுத்தது. இதற்கடுத்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை முடித்த கார்த்தி, விருமன் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அப்படமும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்தில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் கார்த்தி தோன்றுகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் என்டர்டெயினராக வெளியாகும் சர்தார் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கியமான வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடித்து வருகிறார். ஒன்று இளமையான கார்த்தி, இன்னொன்று முதுமையான கார்த்தி. ஆகையால் அப்பா, மகனாக இதில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. வயதான தோற்றத்தில் நரைத்த தாடி, தலைமுடியுடன் நிற்கும் கார்த்தியின் அட்டகாசமான புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும், இளமையான வேடத்தில் இருக்கும் கார்த்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகப்பதால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது மித்ரன் படமாக்கி வருகிறார். கார்த்தியின் விருமன் வெளியான பிறகு சர்தார் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் கார்த்தியின் சர்தார் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ட்ரீட்டாக இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.