நடிகர் விஜய்சேதுபதிக்கு சம்மன் - சைதாப்பேட்டை நீதிமன்றம் 

நடிகர் விஜய்சேதுபதிக்கு சம்மன் - சைதாப்பேட்டை நீதிமன்றம் 
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் பல காலமாக ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் பிரபலமான ஹீரோவாக உருவானவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. 

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த போது, பொது வெளியில் இழிவுபடுத்தி பேசியதாக கூறப்பட்டது. இந்த புகாரில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளரர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சாதியை பற்றி தவறாக பேசியதாகவும் விஜய் சேதுபதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில், ஜனவரி 4 -ஆம் தேதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com