பாலிவுட்டின் பேபிடால் சன்னி லியோனின் பிறந்தநாள்...இணையத்தையே கலக்கி வரும் ரசிகர்கள்..!

பாலிவுட்டின் பேபிடால் சன்னி லியோனின் பிறந்தநாள்...இணையத்தையே கலக்கி வரும் ரசிகர்கள்..!

பாலிவுட்டின் பேபிடால் என செல்லமாக அழைக்கப்படும் சன்னி லியோன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு  ரசிகர்கள் இணையத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கனடாவின் ஓண்டேரியாவில் பிறந்த சன்னி லியோன் கடந்த 2011 ஆம் ஆண்டு பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இந்தியா ரசிகர்களிடையே அறிமுகமானார். பின்னர் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளிணி, தொழில் நிறுவனம் என பலதுறைகளிலும் தனது திறமையை நிரூபித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சன்னி லியோன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சன்னி லியோனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தையும், பாடல்களையும் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.