உலகநாயகனிடம் நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்..!

தொலைப்பேசி மூலம் நலம் விசாரிப்பு..!

உலகநாயகனிடம் நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசனை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார் ரஜினிகாந்த். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார். 

இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என்று கூறியிருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கமல்ஹாசனிடம் நலம் விசாரித்துள்ளார். தொலைப்பேசி மூலம் இந்த நலம் விசாரிப்பு நடைபெற்றுள்ளது.