வெளியானது சூர்யா 42 மோஷன் போஸ்டர்....! வியப்பில் ரசிகர்கள்...!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் சூர்யா 42 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது

வெளியானது சூர்யா 42 மோஷன் போஸ்டர்....! வியப்பில் ரசிகர்கள்...!

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா சூரரை போற்று, ஜெய்பீம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். சூர்யா, பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

அதனைத்தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் கேமியோவாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில், வணங்கான் படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும்  நடித்து வருகிறார். வணங்கான் மற்றும் வாடிவாசல் படங்களில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரசிகர்களை உற்சாகமடைய செய்யும் புதிய அப்டேட்டை சூர்யா 42 படத்தின் குழுவினர் அறிவித்தனர். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அண்மையில் பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் இன்று காலை 10 மணிக்கு வெளியிட இருப்பதாக நேற்று, படக்குழு அறிவித்தது. அதன் படி இன்று காலை 10 மணிக்கு சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

நடிகர் சூர்யா அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, உங்கள் அனைவரது வாழ்த்துக்களும் தேவை என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட்டரை பார்த்த ரசிகர்கள், வேற லெவலில் புல்லரிக்க வைக்கிறது. இருப்பினும் சூர்யாவின் முகத்தை காட்டவில்லை என்பது வருத்தமாக தான் உள்ளது என பல்வேறு கமெண்ட்ஸ்களை தெரிவித்தும், வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படமானது 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.