ஜோ - வின் 'காதல் - தி கோர்' படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சூர்யா...!

ஜோ - வின் 'காதல் - தி கோர்' படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சூர்யா...!

நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பார்வையிட்டார் நடிகர் சூர்யா

மலையாள திரையுலகில் ஜோ : 

நடிகை ஜோதிகா கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள திரையுலகில் கால் பதித்துள்ளார். நடிகர் மம்முட்டியுடன் காதல் - தி கோர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. மம்முட்டியின் மம்மூட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய படப்பணிகள் தற்போது கேரள மாவட்டம் கொச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

நடிகர் சூர்யா விசிட் :  

இந்நிலையில், காதல் - தி கோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா சென்றுள்ளார். படபிடிப்பு தளத்தில் மம்மூட்டி மற்றும் படகுழுவை சந்தித்து பேசியுள்ளார். அது மட்டுமல்லாமல் நடிகர் சூர்யா அவர்களுக்கு உணவு தயார் செய்து அவர்களுடன் உணவும் உட்கொண்டார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : மருத்துவப்படிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி அறிமுகம்..!