சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய சூரியாவின் ஜெய்பீம் !. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய சூரியாவின் ஜெய்பீம் திரைப்படம். இதனையடுத்து கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய சூரியாவின் ஜெய்பீம் !. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...

சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் விருதுளை அள்ளிய ஜெய் பீம் திரைப்படத்தால் ரசிகர்கள் கொண்டாட்டத்தி ஈடுப்பட்டு வருகின்றனர்... சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய் பீம் இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் மிக சிறந்த விமர்சங்களை பெற்று பெரியளவில் வரவேற்பை பெற்றது.

இதனிடையே சமீபத்தில் கூட உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளதை ரசிகர்கள் கொண்டாடினர்.

மேலும் தற்போது NOIDA சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படம் மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

அதன்படி சிறந்த நடிகருக்கான விருது (சூர்யா), சிறந்த நடிகை (லிஜோமோல் ஜோஸ்), சிறந்த திரைப்படம் (ஜெய் பீம்) என மூன்று பிரிவுகளில் ஜெய் பீம் விருதை பெற்றுள்ளது.