சாய்பல்லவியின் கார்கி படத்தை வழங்கும் சூர்யா, ஜோதிகா!!

சாய்பல்லவி நடிக்கும் கார்கி படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழங்கவுள்ளது.

சாய்பல்லவியின் கார்கி படத்தை வழங்கும் சூர்யா, ஜோதிகா!!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி வரிசையாக பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து கார்கி படத்தை சூர்யா, ஜோதிகா அவர்களின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.