அஜித்துடன் நேரடியாக மோதும் சூர்யா..!!

அஜித்துடன் நேரடியாக மோதும் சூர்யா..!!

வலிமை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றே.  இப்படத்திற்கு போட்டியாக சூர்யா எதற்கும் துணிர்ந்தவனாய் துணிந்து இறங்கியுள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் படப்பிடிப்பு முடிந்து வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இப்படமும் ரசிகர்களிடம் ஒரு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தற்போது இரண்டு பெரிய படங்களும் வெளியீட்டிற்கு காத்திருப்பதால் எந்த படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்கும் மற்றும் ரசிகர்கள் ஆதரவு யாருக்கு அதிகமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை எப்படியும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முயற்சியில் ஈடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தற்போது இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டு உள்ளதால் எந்த படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்கும் மற்றும் ரசிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதே படத்தின் வெளியிட்டு தினத்தன்று தான் தெரியும் என பலரும் கூறி வருகின்றனர்.