தி லெஜெண்ட் படத்தின் தெலுங்கு ட்ரெயிலை வெளியிட்டார் நடிகை தமன்னா!

தி லெஜெண்ட் திரைப்படத்தின் தெலுங்கு ட்ரைலர் இன்று மாலை 5.30 மணிக்கு நடிகை தமன்னா - வால் வெளியிடப்பட்டது.

தி லெஜெண்ட் படத்தின் தெலுங்கு ட்ரெயிலை வெளியிட்டார் நடிகை தமன்னா!

சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த சரவணன் தற்போது தி லெஜெண்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தி லெஜெண்ட் ப்ரோடுக்க்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி & ஜெர்ரி இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள படத்தின் இசை உரிமையை  திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தில் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரௌட்டலா நடித்துள்ளார். மேலும் படத்தில், பிரபு, விவேக்,மயில்சாமி, நாசர், தம்பி ராமைய்யா, சுமன், ராய் லட்சுமி, ரோபோ சங்கர் என பெரிய நட்சத்த்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தின் first லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படத்தின் பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர். மேலும் படத்தில் இருந்து மோசலோ மோசலு பாடலும், வாடி வாசல் பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த மே மாதம் 29 ம் தேதி படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.  

தி லெஜெண்ட் திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் ஜூலை 28 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தி லெஜெண்ட் படத்தின் தெலுங்கு ட்ரைலரை ஜூலை 16 ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடிகை தமன்னா வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்தனர். அதன் படி, இன்று தெலுங்கு ட்ரைலரை தமன்னா வெளியிட்டார். இது தெலுங்கு ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்கள் படத்திற்காக காத்திருப்பதாகவும், தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அதோடு இந்தி வெளியீட்டு உரிமையை நம்பி ராஜனின் கணேஷ் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.