ஓடி வந்து கை கொடுத்த ரசிகருக்கு ஷாக் கொடுத்த தமன்னா...மில்க் பியூட்டியின் செயலை பாராட்டும் நெட்டிசன்கள்!

ஓடி வந்து கை கொடுத்த ரசிகருக்கு ஷாக் கொடுத்த தமன்னா...மில்க் பியூட்டியின் செயலை பாராட்டும் நெட்டிசன்கள்!

கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்த நடிகை தமன்னாவிடம் ரசிகர் ஒருவர் கை கொடுத்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

நடிகை தமன்னா தற்போது தென்னிந்திய திரையுலகில் மீண்டும் பிசியாகி உள்ளார். நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். அவர் ரஜினியுடன் நடிப்பது இதுவே முதன்முறை ஆகும். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதுதவிர தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக போலா ஷங்கர் என்கிற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார் தமன்னா. இது தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படமும் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இப்படி ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சூப்பர்ஸ்டாரின் படங்களில் நடித்துள்ள தமன்னா, அப்படத்தின் புரமோஷன் பணிகளில் செம்ம பிசியாக உள்ளார். இதனிடையே அண்மையில் கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக தமன்னா கலந்துகொண்டார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பாளர்களை மீறி தமன்னாவிடம் ஓடி வந்து கை கொடுத்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறக்கக்கோரி ஆந்திர அரசுக்கு கடிதம்!

திடீரென ஓடி வந்து தமன்னாவிற்கு கை கொடுத்த தீவிர ரசிகரை, பவுன்சர்கள் அலேக்காக தூக்கியதை பார்த்த தமன்னா, அந்த ரசிகரை மீண்டும் அழைத்து அவரை ஆசுவாசப்படுத்தி, என்ன வேண்டும் என கேட்க, அவரோ ஒரு செல்பி எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். உடனே சிரித்த முகத்தோடு அந்த ரசிகரின் செல்பிக்கு போஸ் தமன்னா கொடுத்தார். இதனால் அந்த ரசிகர் மிகுந்த உற்சாகத்தில் துள்ளி குதித்தார்.

பொதுவாகவே, நடிகர் நடிகைகள்  பொது இடங்களுக்கு வந்தால் அவர்களது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முற்படுவது வழக்கமான ஒன்று. அப்படி எடுக்க முயலும் போது, சிலர் சிரித்த முகத்தோடு புகைப்படம் எடுத்துக்கொள்வர், அதுவே ஒருசிலர் ரசிகர்களின் கை மேலே பட்டாலே போதும் சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவர். ஆனால், ஓடி வந்து கைக்கொடுத்து செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்ட ரசிகரின் ஆசையை நிதானமாக நிறைவேற்றி கொடுத்த மில்க் பியூட்டியின் இந்த செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.