தமிழ் திரையுலக பிரபலங்கள் புத்தாண்டு வாழ்த்து.!!

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தமிழ் திரையுலக பிரபலங்கள், பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 
தமிழ் திரையுலக பிரபலங்கள் புத்தாண்டு வாழ்த்து.!!
Published on
Updated on
1 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். முன்னதாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வந்த அவர், அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை சொன்னார். அப்போது ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். 

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கும் தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

அதேபோல், நடிகர் சிலம்பரசனும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இறைவனின் பெருங்கருணையால் இந்த புதிய வருடத்தை அனைவரும் காண்கிறோம் எனவும், தனது உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். 

இதேபோன்று நடிகர் சிவகார்த்திகேயனும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com