தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதில்!!

ஹிந்தி இணைப்பு மொழி தொடர்பாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழ்தான் இணைப்பு மொழி என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதில்!!

சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் முருகன், நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த ஏ.ஆர். ரகுமானிடம், ஹிந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி என்று தெரிவித்தார்.