ஒலிம்பியாட் போட்டியில் பங்கெற்கும் இந்திய அணிக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த மாவீரன் குழு

ஒலிம்பியாட் போட்டியில் பங்கெற்கும் இந்திய அணிக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த மாவீரன் குழு

இந்தியாவில் நடக்கும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி, சென்னையில் மாமல்லபுரத்தில் ஒர்ரு தனியார் விடுதியில் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து, அதற்கான பல ஏற்பாடுகள் கடந்த 4 மாதங்களாக நடந்து வரும் நிலையில், இன்று தொடங்கியது செஸ் ஒலிம்பியாடின் துவக்க விழா.

இந்த விழாவை ஒட்டி,  மாவீரன்  படக்குழுவினர் ஒரு விடியோவை வெளியிட்டனர். சிறப்பாக அமைக்கப்பட்ட இந்த கிராஃபிக் வீடியோ, ஒரு பெரும் போர் களத்தில், இரு பெரும் படை சண்டையிடுவதற்கு முன்பு, அவர்களுக்கு இடையில், ஒரு டைமர் வைக்கப்படுகிறது. அதில் இருந்து மறி, இருவர் சதுரங்கம் விளையாடுகின்றனர்.

SK 22 என பெயரிடப்பட்டிருந்த மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வினுடன் இணைந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு மாவீரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு ஆடை, மண்டேலா படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கான தலைப்பு அறிவிப்புக்கான ப்ரோமோ வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது குறிப்பிட்த்தக்கது. இந்நிலையில், ஒலிம்பியாடிற்காக வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.