மீண்டும் இணையும் 'டெடி' படக்குழு!

மீண்டும் டெடி படத்தின் படக்குழு இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மீண்டும் இணையும் 'டெடி' படக்குழு!
Published on
Updated on
1 min read

மிருதன், டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் ஆர்யா, சாயிஷா மற்றும் மகிழ் திருமேனி ஆகியோரது நடிப்பில்  டெடி  என்ற படத்தை இயக்கினார். 

கடந்த மார்ச் மாதம்  ஒடிடி தளத்தில்  வெளியான இப்படம், குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.  இந்நிலையில் டெடி படத்தை தொடர்ந்து, ஆர்யா மற்றும் சக்தி சவுந்தரராஜன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் 'டெடி'யின் இரண்டாவது பாகமாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இப்படம் டெடியின்  2வது பாகம் இல்லை என்றும் ஆக்ஷன், பொழுதுபோக்கு படமாக இது உருவாகிறது என்றும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com