தளபதியை மிஞ்சிய தி லெஜெண்ட்-டின் மாசான ஸ்டண்டுகள்:

தி லெஜெண்ட் படத்தின் புதிய பாடல் ஒன்று தற்போது வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தளபதியை மிஞ்சிய தி லெஜெண்ட்-டின் மாசான ஸ்டண்டுகள்:

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பில், தி லெஜெண்ட் சரவணன் நடிக்கும் தி லெஜெண்ட் படம் வருகிற ஜூலை 28ம் தேதி உலக தியேட்டர்களில் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் பரபரப்பாக நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில், படத்தின் 4வது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

உல்லாசம், விசில் போன்ற படங்களைக் கொடுத்த ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மாசான பாடல்களை, 90’ஸ் கிட்சின் மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கியிருக்கிறார். மேலும், வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் போன்ற பிரபல பாடலாசிரியர்கள் தான் இந்த படத்திற்கு பாடல் எழுதியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, நடன இயக்குனர்களாக, ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் போன்றவர்களும், ஸ்டண்ட்சுக்கு அனல் அரசும் இணைந்து, பிரம்மாண்ட படக்குழு கொண்டு இந்த படத்தை உருவாக்கி வருகிறார் தி லெஜெண்ட் சரவண அருள்.

மறைந்த நடிகர் விவேக்-கின் கடைசி படமாக இருக்கும் இந்த படத்தில், பிரபு, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், விஜயகுமார், போன்ற பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரூடேலா நடித்திருக்கிறார். இந்த படத்தின் தமிழ் ட்ரெயிலர் மே 29ம் தேதி வெளியாகிய நிலையில், தமிழ் பட ரசிகர்கள் பலரும் பல வகையான நல்ல கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள சரவெடி சரவணன் பாடல், மாசான ஆக்‌ஷன் காட்சிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அனல் அரசு வடிவமைத்துள்ள இந்த படத்தின் ஸ்டண்டுகள் மிஅக் அர்ப்புதமாக உருவாகியுள்ள நிலையில், தி லெஜெண்ட்-டின் ஸ்டண்டுகள், மெர்சல் படத்தில் வரும் விஜய்யின் காட்சிகளை மிஞ்சுவதாக நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

வருகிற ஜூலை 28ம் தேதி, உலகம் முழுவதும் சுமார் 2500 தியேட்டர்களுக்கும் மேல், தி லெஜெண்ட் படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு, மக்களிடையே அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், படத்தின் ஆடியோ லான்ச்-சை தென்னிந்திய கதாநாயகிகள் 10 பேர் கொண்டு மாபெரும் விழாவாக நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த தி லெஜெண்ட் படத்தின் தெலுங்கு ட்ரெயிலரை நடிகை தமன்னா வெளியிட்ட நிலையில், படத்தின் இந்தி உரிமத்தை நம்பி ராஜனின் கணேஷ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றது. , இந்த படத்தில், ஒரு சிறப்பு பாடலில் ஆடிய நிலையில், படத்தின் கன்னட ட்ரெயிலரை நடிகை ராய் லக்ஷ்மி வெளியிட்டார்