ஆஸ்கார் நாயகர்களை காண வரும் பிரதமர்....9ஆம் தேதி முதுமலைக்கு வருகிறார்..

ஆஸ்கார் நாயகர்களை காண வரும் பிரதமர்....9ஆம் தேதி முதுமலைக்கு வருகிறார்..

பிரதமர் 'தி எலிபன்ட் விஸ்பரரஸ்' ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெள்ளியை நேரில் சந்தித்து கலந்துரையாட பிரதமர் நரேந்திர மோடி 9ஆம் தேதி முதுமலைக்கு வருகிறார். பிரதமர் தங்களை காண வருவது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பெள்ளி தெரிவித்துள்ளார்.

முதுமலை, யானை முகாமில் உள்ள யானை குட்டிகளும் அதன் பராமரிப்பாளர்களுக்கும் இடையே உள்ள உறவு குறித்து எடுக்கப்பட்ட 'தி எலிபென்ட் விஸ்பர்ஸ்' என்ற ஆவண படம், 'ஆஸ்கார்' விருது வென்றது. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் பாதுகாப்பு முகாமில் பராமரிக்கப்படும், தாயை பிரிந்த இரண்டு யானை குட்டிகளும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பை சித்தரித்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. 

இந்த ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். மேலும் இப்படத்தில் நடித்த பழங்குடியினர்களான பொம்மன், பெள்ளி ஆகியோர் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து பொம்மனிடம் கேட்டபோது இந்த ஆஸ்கார் விருதால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. விமானத்தில் தங்களை அழைத்து வந்தது எங்கள் வாழ்வில் மறக்க முடியாது என்றும் இருவருக்கும் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

வரும் 9ம் தேதி நடைபெறும் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள இந்திய  பிரதமர் நரேந்திர மோடி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகை தர உள்ளதாக வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் டெல்லியில் அறிவித்துள்ளார். மேலும் பாகன் தம்பதியினர் பொம்மன், பெள்ளியை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெள்ளியிடம் கேட்டபோது தங்கள் பகுதிக்கு பிரதமர் வருகைதர உள்ள தகவல் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் வருகையையொட்டி சாலை பணிகள் நடைபாதை பணிகள் தெருவிளக்கு வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளின் பணிகள் வேகமாக நடைபெற்று வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.