சமந்தா மருத்துவமனையில் அனுமதியா..? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

சமந்தா மருத்துவமனையில் அனுமதியா..? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை
Published on
Updated on
1 min read

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இதனிடையே, சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவியது. லேசான இருமலுக்காக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொண்டார் சமந்தா. அதை வைத்து வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். 

இந்நிலையில் நேற்று இரவு சமந்தா ஒரு செல்பி புகைப்படத்தைப் பதிவிட்டு, “நாள் முழுவதும் தூங்கினேன், இப்போது இரவு 9 மணிக்குதான் எழுந்தேன்” எனப் பதிவிட்டு தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com