தேசிய திரைப்பட விருதுகள்: ஓடிடியில் வெளியாகி விருதுகளை தட்டி சென்ற தமிழ் படங்கள்!

ஓடிடி தளத்தில் வெளியானாலும், தமிழ் படங்கள் பல இந்த ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளை அள்ளிச் சென்றது! அதன் பட்டியல் இதோ!

தேசிய திரைப்பட விருதுகள்: ஓடிடியில் வெளியாகி விருதுகளை தட்டி சென்ற தமிழ் படங்கள்!

68வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 2020ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த தமிழ்ப் படங்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டன.

5 விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று:

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த பின்னணி இசைக்கு ஜிவி.பிரகாஷ்குமார், சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதை என மொத்தம் 5 விருதுகளை அள்ளியது.

மாலை முரசு தொலைக்காட்சிக்கு ஜி.வி பிரகாஷ் அளித்த பிரத்தியேக ஆடியோ:

ஜி.வி. பிரகாஷ்:

நான் இதை எதிர்பாக்கவில்லை.. இது தனிநபருக்கான வெற்றி அல்ல ஒரு குழுவுக்கான வெற்றி.. இது கடின உழைப்புக்காக கிடைத்த வெற்றி என ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார்.

மாலை முரசு தொலைக்காட்சிக்கு மடோன் அஸ்வின் அளித்த பிரத்தியேக ஆடியோ:

மடோன் அஸ்வின்:

அறிமுக படத்திலே இந்த விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடிக்கிறேன் என மடோன் அஸ்வின் தெரிவித்தார். இது தனிநபருக்கான வெற்றி அல்ல ஒரு குழுவுக்கான வெற்றி.. இது கடின உழைப்புக்காக கிடைத்த வெற்றி எனவும் இதே போல் மேலும் பல படங்களை கொடுப்பேன் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், யாரும் விருது எதிர்பார்த்து படம் பண்ணுவதில்லை என தெரிவித்தார்.

மாலை முரசு தொலைக்காட்சிக்கு யோகி பாபு அளித்த பிரத்தியேக ஆடியோ:

யோகி பாபு:

என்னை இயக்கிய இயக்குனருக்கு இந்த 2 விருதுகள் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என யோகி பாபு தெரிவித்தார். மடோன் அஸ்வின் (இயக்குனர்) இந்த படத்தை இயக்க கடின உழைப்பு போட்டு இருக்கிறார். இந்த விருது நான் எதிர்பார்த்தது தான் என யோகி பாபு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நிறைய அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறேன் என தெரிவித்தார்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்:

வசந்த் இயக்கத்தில் வெளியான சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான விருதை வென்றது. அப்படத்தில் நடித்த லட்சுமி பிரியா சிறந்த துணை நடிகை விருது பெற்றார்.

மண்டேலா:

யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை இயக்கியவர் மடோன் அஸ்வின். இவருக்கு சிறந்த அறிமுக இயக்குனர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த வசனகர்த்தா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

விருது பெற்ற மூன்று படங்களும் ஓடிடியில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.